என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷேக் ஹசினா"
- பாராளுமன்றத்தில் உள்ள அறையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
- பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
புதுடெல்லி:
வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து வங்காளேதச நிலவரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மத்திய மந்திரிகளுடன் ஆலோசித்தார்.
இந்த நிலையில் வங்காளதேசம் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதன் படி காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் உள்ள அறையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசின் கே.சி. வேணு கோபால், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரசை சேர்ந்த (சரத்பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தியா-வங்காள தேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வங்காளதேச அரசியல் சூழல், ஷேக் ஹசினா இந்தியாவுக்கு வந்தது உள்ளிட்டவை குறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கூட்டத்தில் விரிவான விளக்கத்தை அளித்தார்.
பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவினையும், புரிதலையும் பாராட்டுவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
#WATCH | Delhi: All-party meeting underway in the Parliament on the issue of Bangladesh. EAM Dr S Jaishankar briefs the members of different political parties. pic.twitter.com/4Cl1rFRkyG
— ANI (@ANI) August 6, 2024
- நேற்று இந்தியா வந்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா வெளியுறவு மந்திரியை சந்தித்தார்.
- டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாள் அரசுமுறை பயணமாக நேற்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தார். வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே, டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்திய- வங்கதேசம் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளை இணைக்கும் வரலாறு, மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து பேசியதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரையும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்தித்தார்.
வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 287 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் நான்காவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.
இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆளும்கட்சியின் முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர வேண்டும் என உங்கள் நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளனர் என குறிப்பிட்ட மோடி, வங்காளதேசத்துக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
முதல் வெளிநாட்டு தலைவராக வாழ்த்து தெரிவித்த மோடிக்கும், தங்கள் நாட்டுக்கு இந்தியா செய்துவரும் உதவிகளுக்காகவும் ஷேக் ஹசினா நன்றி தெரிவித்ததாக வங்காளதேசம் பிரதமரின் செய்தித்துறை செயலாளர் இஹ்சானுல் கரீம் குறிப்பிட்டுள்ளார். #PMModi #BangladeshPM #Hasina
வங்காளதேசத்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்காள தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரதமர் ஷேக் ஹசினா இன்று காலை டாக்காவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்காள தேசிய கட்சி (பி.என்.பி.) தலைவர்களின் உதவியுடன் பொதுத்தேர்தலை சீர்குலைக்க முயல்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை வங்காள தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஆளும் அவாமி லீக் கட்சி 150-க்கும் அதிகமான இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அண்டைநாடான வங்காளதேசத்தில் இரு பெரும் பெண் அரசியல் தலைவர்களாக ஷேக் ஹசினாவும், கலிதா ஜியாவும் உள்ளனர்.
இவர்களில் தற்போதைய பிரதமராக பதவி வகிக்கும் ஷேக் ஹசினா, மறைந்த முன்னாள் பிரதமரும் வங்காளதேசம் என்னும் தனிநாடு உதயமாக வித்திட்டவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளாவார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் ஷேக் ஹசினா பதவி வகித்து வருகிறார்.
மற்றொரு பெண் அரசியல் தலைவரான கலிதா ஜியா, வங்காளதேசம் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியாவார்.
வங்காளதேசம் தேசியவாத கட்சியின் தலைவராகவும், அந்நாட்டின் ராணுவ தளபதியாகவும் இருந்த ஜியாவுர் ரஹ்மான் கடந்த 1981-ம் ஆண்டு கொல்லப்பட்ட பின்னர் கலிதா ஜியா தீவிர அரசியலில் குதித்தார்.
இந்நிலையில், 21-8-2004 அன்று ஆண்டு கலிதா ஜியா பிரதமராக பதவி வகித்தபோது எதிர்க்கட்சியான அவாமி லீக் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியின்போது எதிர்க்கட்சி தலைவர் ஷேக் ஹசினாவை குறிவைத்து நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜில்லுர் ரஹ்மானின் மனைவியும் அவாமி லீக் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான ஐவி ரஹ்மான் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ஷேக் ஹசினா காயங்களுடன் உயிர் தப்பினார். எனினும், அவரது காதுகளில் கேட்கும் திறன் பறிபோனது.
ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஹர்க்கத்துல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்னும் பயங்கரவாத அமைப்பினரின் துணையுடன் ஷேக் ஹசினாவை கொல்ல முயன்றதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஷாஹெத் நூருதீன், முன்னாள் உள்துறை மந்திரி லுத்ஃபோஸ்மான் பாபர் உள்பட 19 பேருக்கு மரண தண்டனையும், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்பட 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். #KhaledaZia #Hasina #GrenadeAttack
வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் இருநாட்டு உறவுகளின் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #BIMSTEC #Modi #SheikhHasina
வங்காளதேசத்தின் உள்துறை மந்திரி அசாதுஸமான் கான் விடுத்த அழைப்பை ஏற்று, இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜூலை 13 முதல் 15 வரை வங்காளதேசத்தில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து பேசினார். ‘பிரதமர் ஷேக் ஹசினாவுடனான இன்றைய சந்திப்பு சிறப்பான முறையில் அமைந்தது. இருநாட்டுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் எல்லைப்பாதுகாப்பு குறித்த முக்கிய விவகாரங்கள் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. பிரதமர் ஷேக் ஹசினாவை இந்தியாவிற்கு வருமாறும் தான் அழைப்பு விடுத்துள்ளேன்’ என சந்திப்பிற்கு பிறகு டுவிட்டரில் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ராஜ்நாத் சிங் மற்றும் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் வங்காளதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய விசா அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
மேலும், சுமார் 2 வருடங்களுக்கு பிறகு இருநாட்டு உள்துறை மந்திரிகள் இடையேயான சந்திப்பு நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #SheikhHasina #RajnathSingh
இருநாள் அரசுமுறை பயணமாக வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் பகுதியில் விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் ‘பங்களா தேஷ் பவன்’ கட்டிடத்தை ஷேக் ஹசினா திறந்து வைத்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம், பஸ்ச்சிம் பர்தமன் மாவட்டம், அசனால் நகரில் உள்ள காஸி நஸ்ருல் பல்கலைக்கழகம் இன்று ஷேக் ஹசினாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
பட்டத்தை பெற்றுகொண்டு ஏற்புரை ஆற்றிய ஷேக் ஹசினா, வங்காளதேசம் நாட்டின் தேசிய கவியான காஸி நஸ்ருல் பெயரால் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டத்தை பெற்றதில் பெருமை அடைகிறேன். இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கிய முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக வங்காளதேசம் நாட்டில் வாழும் அனைவருக்குமான பெருமிதம் என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் அவர் பேசியதாவது:-
குறிப்பாக, எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பிறகு எனக்கும், என் தங்கை ஷேக் ரெஹானா உட்பட எங்கள் குடும்பத்தை சேர்ந்த 18 உறுப்பினர்களுக்கும் அரசியல் தஞ்சம் அளித்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் அளித்த ஆதரவை எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது.
இன்று புவியியல் அமைப்பின்படி, வங்காளதேசமும், மேற்கு வங்காளம் மாநிலமும் பிரிந்து இருக்கலாம். ஆனால், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் காஸி நஸ்ருல் என்னும் மிகச்சிறந்த கவிஞர்களை யாராலும் இந்த இருநாட்டு மக்களின் இதயங்களில் இருந்து பிரிக்கவே முடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #SheikhHasina #HonoraryDLittKNU
வங்காளதேச விடுதலைப் போரின்போது இந்தியா, வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மிகப்பெரிய அரங்கம் அமைப்பதற்காக, பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
வங்காளதேச பவன் இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை பறைசாற்றுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், 1971 ஆம் ஆண்டில் நடந்த விடுதலைப் போர் மற்றும் வங்காளதேசத்துடன் ரவீந்திரநாத் தாகூருக்கு இருந்த நட்புறவு ஆகியவற்றை காட்டும் ஒரு அருங்காட்சியகமும் இந்த வங்காளதேச பவனில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #BangladeshBhavan #SantiNiketan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்